Tuesday, March 12, 2024

படமும் கருத்தும் by Kiruthika

 


என்னை அதிகம் பிடித்தவனுக்கு...

பித்து பிடிப்பது உறுதி!...

இப்படிக்கு

உங்கள் பணம்😂


உங்கள் தேவைக்கு மட்டும் ..

என்னிடம் வாங்கள்..!..

தேவை தீர்ந்தும்..

ஆசை தீயாகி..

என்னை துரத்தினீர்கள் என்றால்...

கொள்ளை போக போவது நீங்கள் தான் !!!..


 என்னை..

உங்கள் சட்டை பையில் மட்டும் வையுங்கள்!...

பின் இருக்கும் -

உங்கள் நெஞ்சத்தில்..

அன்பு 

உறவுகளை வையுங்கள்!...

ஏனெனில் ..

இன்று 

நான் உங்களது..

நாளை

யாரோடதாகவோ 

ஆவேன் ...!...

மறவாதீர்கள் !..


ஒன்றை..

முன்னே போட்டு விட்டு..

பின்னே..

ஓர் இலக்கு ..

ஈர் இலக்கு..

மூன்று

நான்கு

ஐந்து..

ஆறு..

ஏழு.. 

எட்டு என.. பூஜ்ஜியங்களை

அடுக்கி அடுக்கி

உங்கள் இலக்கை...

என் பக்கமே..

திருப்பி கொண்டு இருந்தால் ..

தீராது 

என் மேல் நீங்கள் ..

கொண்ட காதல்!..

பத்தாது 

உங்கள் 

ஆயுட்காலமும் !!!..

என்னை கொஞ்சம் 

தள்ளியே 

வைத்து ..

கொள்ளுங்கள்!..

உங்கள் 

நிம்மதி 

உங்களோடு 

நிற்கும்!!!...

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...