Monday, March 11, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



வெட்டு பட்டு போன என் வாழ்வு மீண்டும் துளிர்க்குது உன் கருணை மழையால்


 மரக்கடைக்கு போகும் முன்னே துளிர் விட்டதால்

மரம் கொண்டது வெற்றி இன்னும் சில வருடங்கள் உயிர் வாழ


 பெண் மட்டுமே புதிரல்ல

இந்த மரமும் தான்

கடினமான பாதையில் 

பயணித்தாலும் 

காதல் உண்டு

புறத்தோற்றம் பெரிதல்ல

அகமே சிறப்பு


 நிலத்தின் ஈரம் மரத்தில் ஏறியது


மரத்தின் ஈரத்தால்

இலையும் துளிர்விட்டது


இலையும் துளிர் விட்டதால் பசுமை கொண்டது


பசுமை பூத்ததால் கிளைகள் விரிந்தது


கிளைகள் விரிய நிழல் தந்தது


நிழல் மட்டுமல்ல காய், கனி ஈன்றது


காய் , கனி உண்டு நிலத்தில் இளைப்பாறி அதை வெட்ட உத்தரவு இட்ட

மனித மனத்தின் ஈரம்

எங்கே சென்றது?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...