Tuesday, March 26, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


கரைந்த வெண்ணிலவில்

தன்னை புத்தகத்தில் 

கரைத்த, 

களைத்த பெண் நிலா


 ஏதும் தவறுவதில்லை இங்கே

சீறும் சர்ப்பமானாலும்

சேரும் கரமானாலும் 

சிதையும் சிரமானாலும்

வாழ்க்கை முடிவதில்லை அவரவர் நம்பிக்கையில்


 கரைந்த வெண்ணிலவின் வெளிச்சத்தை கூட மறக்க வைத்தது அவள் கடந்த இருண்ட வாழ்வு


 ஒற்றை நிலவல்ல இங்கே

இரட்டை நிலவுகள், 

ஒன்றை ஒன்று முகம்

 காட்ட மறந்தோ? இல்லை மறுத்தோ

 ஒளிந்து கொண்டு ஒளிர்கின்றன


சூடிய மலர் வாடி கீழே விழ

கற்ற கலை நினைவிலிருந்து மறக்க

எளிமை வாழ்வு ஏளனப்பட

கவிழ்ந்து கொண்டது சிரம்

மறம் போற்றிய காதலனை

துறந்து விட்ட படியால்

துவண்டு போய் இருந்தாலும் வளரும் பிறை போலே

தொடரும் இந்த

உறவும் என்று

ஆறுதலாய் சொல்லும் வரிகள் 

காலத்தின் வழியே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...