Thursday, February 16, 2023

அன்புள்ள கண்ணே

 


அன்புள்ள  கண்ணே,

   பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட மருத்துமனை காதலர் தினத்திற்காக காத்திருந்தது.பயம் கலந்த சோகத்தில் நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன் பெற்றோர் ஆகப்போகிறோம் என்ற அளவற்ற மகிழ்ச்சியை தந்த இடம்.அன்று குழந்தைக்கு இதய துடிப்பு இருக்கிறது ஆனால் வளர்ச்சி மட்டும் குறைவு என்ற ஆதரவு வார்த்தைகளை சுமந்து சென்றோம்.

என் உயிரில் கலந்து உடலில் மிதந்த கண்ணே..பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இதே ப்ரவரி பதினாறாம் நாள் உன் இதய துடிப்பு நின்றது.உன்னை பிரசவிக்க வேண்டிய இடத்தில் மயான இருளும் பயமும் ..என்னை வேதனைப்படுத்த வேண்டாம் என்று நினைத்தாயோ தெரியவில்லை.என்ன தவறு செய்தோம் என்றும் தெரியவில்லை..உன் நினைவாக விடநினைத்ததை கூட கடைப்பிடிக்க முடியவில்லை.முடிந்தால் என்னை மன்னிப்பாயா....

இப்படிக்கு,

அன்புள்ள அம்மா

4 comments:

  1. கண்கள் பனித்தன. எதிருக்கு கூட இந்த மாதிரியான சம்பவம் வரக்கூடாது என்று நினைப்பதுண்டு. சில நினைவுகள் நம்மை விட்டு நீங்க மறுக்கும். அதில் இது அடங்கும். உணர்ச்சிவசப்பட வைத்து கடிதம் வித்யா. மறக்க சொல்ல மனம் மறுக்கிறது. நீங்கா நினைவோடு வாழவும் கற்றுக் கொள்ளவேண்டும் என்று சொல்லி கொடுத்திருக்கிறது கொரானா

    ReplyDelete
  2. கண்டிப்பாக வீணா 🙏

    ReplyDelete
  3. அன்று இருந்த சுமையை இன்றும் சுமந்துகொண்டிருக்கும் மனது பல சுகமானது சில சுமையானது வலிகளை கடந்து செல்வது தான் வாழ்கை ஒருவருக்கு ஒருவர் தேற்றி கொண்டு நடை போடுவோம்

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...