Monday, February 27, 2023

விடையறியா கேள்விகள் by Veena Shankar

 


விடையறியா கேள்விகள்



நமக்கு தெரியாமலே நம் உடலின் அமைப்பு மாறுவதும் 

(அதனால் நம் ஆடையின் அளவுகள் மாறுவதும்)



மண்ணில் விதைத்த விதைகள் வெளிப்படுவதும்

(அதனின்று விருட்சமாய் உருவெடுப்பதும்)



பல வண்ண சேலைகள் இருந்தாலும் புது ரகங்கள் வந்தவுடன் வாங்க முனைவதும்

(பின்னர் காசு செலவழிந்ததை எண்ணி வருத்தப்படுவதும்)



விடுமுறைக்கு எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து அந்த நாளையும் பரபரப்பாக மாற்றுவதும்

(மற்ற நாட்களில் வேலையின் நிமித்தமாகவும்) 



தினமும் படிக்கும் புத்தகத்தின் ஓரங்கள் மடிவதும் 

(அதை நினைத்து நம்மை நாம் கடிந்து கொள்வதும்)



சரியான நேரத்தில் வரும் பால்காரர் ஒருசில தினங்கள் தாமதமாக வருவதும்

(அதுவரை பொறுக்காத நாம் அவரை வசைபாடுவதும்)



சுற்றத்தார் உதவுவதில்லை என்று அவர்களை தவறாக நினைப்பதும்

(நாமும் அப்படித்தான் உள்ளோம் என்பதை மறந்து விடுவதும்)



அடிக்கடி மருத்தவ செலவு ஏற்படுகிறது என்று அமைதியில்லாமல் தவிப்பதும்

(ஆனால் நம் ஆரோக்கியம் மேம்படவே என்று நினைக்க தவறுவதும்)



கையில் காசு நிற்பதில்லை என்று புலம்புவதும்

(பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கிறது என்பதை உணர முடிந்தும்)



என்னை கவனிக்க யாருமில்லை, உடலில் தெம்பில்லை என்று சொல்வதும்

(இருந்தாலும் வாழ்க்கையை கடக்க பாடுபடுவதும்)



தனக்கு தைரியமில்லை என்று சொல்வதும்

(அடுத்தவர் தன்னை வீரன் என்று சொல்ல வேண்டும் என்று நினைப்பதும்)



விடை தெரியா கேள்விகளே பதில் நம்மிடமே இருந்தும்

1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...