Tuesday, February 21, 2023

"மை" விதி by Veena Shankar




 " மை "விதி


அடுத்தவர் இருந்தும் அமைதியை தேடினால் அது தனிமை

மகிழ்ச்சியை பகிர யாரும் இல்லாமல் போனால் அது வெறுமை

பேச்சில் இருக்க வேண்டும் குளுமை

அறிவில் கொள்ள வேண்டும் செழுமை

குற்றம் கொள்வது இளமை

குறிப்பறிந்து நடப்பது முதுமை

கூடி கூடி பேசினால் அது இனிமை

என்றுமே அந்த நினைவை மனதில் சுமப்பது பசுமை

மனதில் வஞ்சம் கொள்வது கொடுமை

பிறரை காக்க நினைப்பது அருமை

கொடுப்பதில் வேண்டாம் சிறுமை

என்றும் அன்பால் இணைவது பெருமை

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...