Friday, February 10, 2023

அன்புள்ள கடவுளே by Vidhya Nivash

 


அன்புள்ள கடவுளே,

நலமா? ஒரு மனிதன் தன்னில் இருக்கும் நம்பிக்கையே  உம்மையாக பாகுவித்து வணங்குகிறான்.இதில் ஏன் ஆணுக்கு ஒரு விதி பெண்ணுக்கு ஒரு விதி.ஒருவரை ஒருவர் சார்ந்ததே இந்த பிறவி இதில் ஏன் ஓரவஞ்சனை. சில அறிவியல் பூர்வமானவற்றை ஏற்க தயார்.எந்த கடவுளும் சொல்லாதை யார் திணித்தது.சமீபத்தில் வந்த அயலி திரைப்படம் அனைவராலும் பேசப்படும் படம் .ஒவ்வொரு பெண்ணும் கேட்கும் கேள்வி தன்னுள் பல முறை .. அருமையான படம்.இதையே தான்  பாரதியும் பெரியாரும் போராடி வாங்கி தந்தனர்.இதை எல்லாம் தாண்டி நிலவையும் தொட்டு விட்டோம் என்றாலும்..இன்னும் இந்த மாதிரி திரைபடம் வருகிறது என்றால்...அட கடவுளே இந்த நூற்றாண்டிலும் உன் பெயரில் இன்னும் தொடருகிறது..கொள்ளுப் பேரன் எடுத்தால் கூட இது தொடருமோ..நம்பிக்கை மூடநம்பிக்கையாக ஆனதே வினை.அதை வேரறுக்க நீங்களே பதில் சொல்லுங்க கடவுளே..

பழக்கவழக்கம் 

பழக பழக பழகிய

 பழக்கப்பட்ட பழக்கமான 

பழக்கப்பட்டு போன வழக்கங்களை

 ஏன் சுமந்து செல்லகிறோமோ..




5 comments:

  1. மூடநம்பிக்கை உள்ளவரை மனிதர்கள் எவரும் திருந்த போவதில்லை. எல்லாம் அவன் செயல் என்று சொன்னாலும் கடைசியில் அவரே நம்மை மாற்ற முடியாத சூழல் வந்துவிடுமோ என்ற அச்சம் நமிடம் இல்லாமல் இல்லை. அருமையான பதிவு வித்யா

    ReplyDelete
  2. மூடநம்பிக்கையின் உச்சத்திற்கு எனது எழுத்து


    பருவம் அடையும் பெண் தீட்டல்ல

    உன்னை பிழிந்து எடுத்த பெண் தீட்டல்ல

    உன்னை அவள் வயிற்றை கிழித்துஎடுக்கும் பொழுது தீட்டல்ல

    மாதம் வரும் உதிரம் தீட்டல்ல

    அறிவு கொண்டு அளவற்று சிந்திக்கும் நீயே தீட்டு உன் புத்தியை தீட்டு

    ----சின்னா

    ReplyDelete
  3. அழகான வரிகள். அருமை நண்பரே

    ReplyDelete
  4. அருமை . உண்மை சார்

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...