Saturday, February 11, 2023

அடர்ந்த காடும் அன்பும் by Vidhya Nivash

 


அளவிற்கு மிஞ்சினால் அமுதும்

 விஷமாக மாறும் என்பர்

அது அன்பிற்கு இல்லையேல்

கொடுக்க கொடுக்க 

ஒரு நிலையில் பெறுபவர் 

பிறருக்கு கொடுக்க 

வளர்ந்து செல்லும் 

என்றும் குறையா செல்வம்

படிக்க படிக்க அறிவு பெருகும்

அது படிக்கும் புத்தகத்தை பொருத்து 

பழக பழக மனம் பக்குவமாகும்

அதுவும் பழகுபவரை பொருத்தே

நடக்க நடக்க கால்கள் ஓய 

பயணம் கனவிலே நீள

பறக்க பறக்க மனம் மேலே பாயும்

கடல் அலைகள் ஓயும் ஓயாது கவலைகள் 

சிரிக்க சிந்திக்க வயிறும் மனமும் வலிக்க

மூட மூட பொங்கி வழியும் கோபமும்

அதை காற்றில் கலக்க மறைந்து

 போனால் என்ன அடர்ந்த காட்டில்

விளையாடும் அணில் போல் மரம் விட்டு மரம் தாவுதே மனம்

காட்டிலும் அன்பிலும் சிக்கி கொண்டால் வழி தெரியாது

 அவை விடும் வரை





2 comments:

  1. அழகான எழுத்து வடிவம். படிக்க படிக்க ஆனந்தாம் பெருகுகிறது

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...