அன்புள்ள பிராணநாத,அந்த பிராணநாதரை போல் சரிபங்கு கொடுத்துள்ளீர்.குதிரைக்கு கடிவாளம் கட்டினார் போல் என்னை சுற்றி ஒரு வட்டம் போட்டு மனதிலே கனவுகளை கண்டு வீடே உலகம் என்று வாழ்ந்த விட்டில் பூச்சி இன்று பட்டாம் பூச்சி போல் வளம் வருகிறது என்றால் அந்த முழுபெருமையும் உங்களையே சாரும்.சரியான சிடுமூஞ்சி நான் எனக்கு உணர்வை வெளிப்படுத்த தெரியாது தன்னம்பிக்கை இருந்த அளவுக்கு வெளிஉலக பழக்கம் இல்லை.பொத்தி பொத்தி வளர்த்த அப்பா முதலில் வீட்டை விட்டு வெளியே போய் பலரிடம் பழகு வெளியே கற்க வேண்டியவை நிறைய என்ற முழுசுதந்திரமும் கணக்கு கேட்காமல் உரிமை கொடுத்த இரண்டாவது தந்தை.அப்படி நான் வெளியே வராவிட்டால் இப்படி எண்ணத்தில் வந்தவை விண்மீனில் வராமல் கனவிலே தொலைந்திருக்கும்.எங்களின் ஆசையை நிறைவேற்ற எந்த குறையும் சிரமமும் இல்லாமல் இருக்க எல்லாவற்றையும் தானே சுமந்து உழைக்கும் கடும் உழைப்பாளி.இது வரை யாருக்கும் காதல் கடிதம் எழுதியது இல்லை எனக்கும் யாரும் எழுதியது இல்லை.பட்டாம்பூச்சி போல் சுற்றி சூரியஉதயம்,மறைவு,மலை,கடல்,வானம்,விண்மீன் என பார்த்தவை யாவும் ரசிக்கும் பக்குவமும் மனநிறைவும் அடைந்து விட்டேன்.நீங்கள் இருக்கும் தைரியத்தில் எதையும் பற்றி கவலைப்பட்டதில்லை.சில நேரம் குழந்தை போல் உங்கள் பிராணத்தை வாங்கியதற்கு மன்னிப்பும்,எப்போதும் ஒரு கை நிழல் போல வர என்ன தவம் செய்தேன்.எத்தனை கருத்து வேறுபாடு வந்தாலும் என்றும் குறையாத உங்கள் அன்பிலும் அக்கறையிலும் கண்மூடித்தனமாக தான் உள்ளேன்.வருங்காலமும் ஆரோக்கியமான அன்பான வாழ்க்கை வாழ கைக்கோர்க இறைவனை வேண்டுகிறேன் .
Sunday, February 12, 2023
அன்புள்ள பிராணநாத by Vidhya Nivash
Subscribe to:
Post Comments (Atom)
இன்றைய சம்பவம் by Veena Shankar
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
-
நாணயத்தின் இருபக்கமோ இவர்கள். கொடுக்க கொடுக்க குறையா வளரும் உள்ளங்கள் இணைந்து இங்கே பலரின் நம்பிக்கையை உரமேற்ற, மெருகேரும் கரங்கள் வில...
-
உடையார் - பாகம் 1 by Vidhya Nivash அனைவருக்கும் வணக்கம், பாலகுமாரன் அவர்களின் உடையார்,அவருடைய சொந்த ஊரான பழமார்நேரி கிராமத்திலிருந்து ஆரம...

உண்மை வித்யா. இரண்டாவது தந்தை என்பது எல்லோருக்கும் அமையாது. அது ஒரு வரம். நம்மை பொக்கிஷம் போல் வைத்திருப்பது போற்றுதலுக்குரியது. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி வீணா😊
ReplyDelete