Friday, February 17, 2023

கண்ணாடிக்குக்கூட வியர்க்க by Vidhya Nivash

 


தண்ணீரில் விளையாடிய கார்கூந்தல் தண்ணீர் சொட்ட சொட்ட நிலத்தில் நடைபோட பட்ட இடம் தெரியாமல் ஏங்கிய மண் விழுங்க 

இருப்புச்சட்டியில் மிதமான அனலில் பல நேரம் உருண்டு புரட்டப்பட்ட அல்வா நெய் சொட்ட சொட்ட அதை ருசிக்க ஏங்கிய மனம் வாயில் இட்ட நிமிடம் கரைய

பதமாக அரைத்த மாவில் எண்ணெயில் மிதந்த பூப்போன்ற வெள்ளை பணியாரம் எண்ணெய் சொட்ட சொட்ட காரச்சட்னியுடன் பிட்ட நிமிடம் மாயமாக போக

மாலையில் உறங்கி அதிகாலையில் பனித்துளி எழுப்பி மெதுவாக வெடித்த அரும்பு தேன் செட்ட செட்ட அயராது சுற்றிய தேனீ அலுங்காமல் விழுங்க 

வெண்புகை போன்ற மேகங்கள் கனக்க ஒன்றோடு ஒன்று மோத அடைபட்ட மழைத்துளி சொட்ட சொட்ட நனைந்த அட கண்ணாடிக்குக்கூட வியர்க்க...

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வியர்வை, உழைப்பின் ஆதாரம். ஆனால் நேர்மாறாக இன்குபேட்டறில் வைக்கப்பட்ட சிசுவினால் தாயின் வியர்வையையும் ஞாபகப்படுத்துகிறது

    ReplyDelete
  3. அருமையான உண்மையான எழுத்து வடிவம்

    ReplyDelete
  4. உஷ்ணம் கூடினால் வியர்க்கும், கண்ணாடி நேரெதிர் உயிரற்ற பொருளுக்கும் உணர்வு கொடுத்த தோழி நன்று

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...