Thursday, February 2, 2023

கொட்டாங்குச்சியின் புது பரிணாமம் by Vidhya Nivash


 

கொட்டாங்குச்சியில் தேனீர் சில நாட்களுக்கு முன் வலைத்தளத்தில் கண்டேன். புதுவிதமான தேனீராக தோன்றியது.இன்று சுவைத்துவிட்டேன்..

உன்னை நான் தேடி தேடி கண்டேன்...

நீயோ இது என்ன ஆச்சரியம் நம்மை குப்பையில் தான் எறிவார்களே இது என்ன புதிதாக தண்ணீர் நிரப்பி பார்க்கிறாள். 

மண்டை குழம்பி போய்விட்டதா??

பல நாள் ஓட்டை..

இன்று அகபட்டாய்..

இஞ்சி தட்டி போட்டு டீத்தூளும் பாலும் கலந்து நீ பொங்கி வர பொங்கலோ பொங்கலோ என்று பாட தோன்றியது .

வீடு முழுவதும் உன் வாசம்

பருக பருக பரவசம்

ஆஹா இனி நம்மள வச்சு வச்சு செய்யபோறாங்களா!!


3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மண்டை ஓட்டை வைத்து மந்திரம் செய்வான்
    என் ஓட்டை வைத்து தந்திரமாக தேநீர்
    மேலோகத்தில் என்னை சட்டியில் வறுத்தெடுத்தது போல
    நான் என்ன பாவம் செய்தேன்
    கொட்டாங்குச்சியின் புலம்பல் !!!!!!!

    தாங்கள் கவிதை நன்று

    ReplyDelete
    Replies
    1. அருமையான கொட்டாங்குச்சியின் புலம்பல்.
      மிக்க நன்றி😊

      Delete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...