அணைக்கு அடங்கா தண்ணீரும்
தண்ணீருக்கு அடங்கா நெருப்பும்
நெருப்புக்கு அடங்கா வேங்கையும்
வேங்கைக்கு அடங்கா மாவீரனும்
மாவீரனுக்கு அடங்கா பிள்ளையும்
பிள்ளைக்கு அடங்கா பிணியும்
பிணிக்கு அடங்கா உடலும்
உடலுக்கு அடங்கா உணவும்
உணவுக்கு அடங்கா பசியும்
பசிக்கு அடங்கா கோபமும்
கோபத்திற்கு அடங்கா பணமும்
பணத்திற்கு அடங்கா குணமும்
குணத்திற்கு அடங்கா மனமும்
மனதிற்கு அடங்கா ஆசையும்
ஆசைக்கு அடங்கா பெண்ணும்
பெண்ணிற்கு அடங்கா ஆணும்
ஆணுக்கு அடங்கா தேடலும்
கடைசில் எங்கு அடங்கும்??
மண்ணிலா...

அருமை வித்யா. மண்ணில் அடங்குபவருக்கும் மண்ணின் மீது தான் ஆவல்
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete