Thursday, February 23, 2023

படிகள் by Vidhya Nivash

 


படிகள் பளபளத்தால் வழுக்கும்

படிகள் சொரச்சொரப்பாகவும் ,

பார்க்க  கடுமையாகவும் இருக்கும்

 கரடுமுரடான படிகள் அனுப்பமிக்கவை

வெற்றிபடிகள்,

படிகள் ஏறவும் இறங்கவும் காத்திருக்கிறது,

அதில் ஏற வேண்டிய இடத்தில் ஏறி

இறங்க வேண்டிய இடத்தில் இறங்க 

வேண்டியது நம் பொறுப்பு..

படிகள் இல்லையேல் தடுமாற்றம்  ஒவ்வொரு

 காலத்திலும் ஒரு படி தேவை

பயணிப்போர் முடிந்தால் படியாக பிறருக்கு

 கைக்கொடுக்கலாம்

முடியாவிட்டால் படிகளை நசுக்காமல்

 விலகினாலே ஏறிய படிக்கு செய்யும் கைமாறு

இப்போது படிகள் நிறைய உள்ளது அது நகரும்

 படியா..  நகரா படியா.. என்பது உங்கள்

 ஆரோக்கியத்தை பொருத்தே...



1 comment:

  1. அழுத்தமான படிகள் வித்யா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...