Monday, February 27, 2023

கண்டு நின்றது by Vidhya Nivash

  


பல்லின் வரிசை போல் மேலே கீழே

 ஒன்றில்லை மற்றொன்று செயலற்றது

கண்ணுக்குள் இருக்கும் மணி போல் உன்னுள் நான்

 உள்ளே வெளியே செல்லாமல் ஓரிடத்தில்

 மேலே கீழே ஆடும் நாக்கு

உள்ளே வெளியே சென்று வரும் மூச்சு

மூச்சு விடாமல் அடக்கிய பேச்சு

பேச்சிற்கு மயங்கிய மனம்

மனத்திற்குள் எத்தனை ரணம்

மேலே கீழே உள்ளே வெளியே ஓடும் 

நிலையற்ற எண்ணம் வானின்

 வண்ணக்கலவையை கண்டு நின்றது



2 comments:

  1. வானவில், வானத்தின் வனப்பு. அழகு உங்கள் எழுத்தில்

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...