Friday, February 3, 2023

மூடுபனி by Vidhya Nivash

 


மூடுபனி போல் வாழ்வியல்..

உன்னை நான் என்னை நீ புரியாமல் திகைக்க வருடங்கள் உருண்டோடின

மெல்லிய நூலிழை போலே ஊடல்கள் 

சத்தம் மட்டுமே பெரிதாக வரும் ஒர் இரவில் எல்லாம் மறைய சமாதானம்

ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து பார்த்ததே இல்லை ஆனால் எந்நேரமும் பொய் பூசல்

நாணயத்தின் இருபக்கம் போல் ஒருவர் ஒருவரை வழி நடத்த சிக்கனததில்  வளர்ந்த ஆலமரம் பலருக்கு குடை

காலம் போன காலத்தில் சிறுபிள்ளைகள் போல போட்டா போட்டி

நகமும் சதையும் போல் ஒன்றை விட்டு ஒன்று விலகாது 

அடர்பனி எப்போதும் வந்து வந்து போர்த்தி செல்வது போல் நீண்டு செல்லும் நேசம்

பனியின் ஊடே மழை சாரல் போல் அன்பு வாசல் நனைத்துச் செல்ல

சூரியன் நிழலில் கோலமிட எப்போதும் வீசும் ஈரகாற்றோடு நீண்டு செல்லும் பனியின் கதகதப்பும் அரவணைப்பும்... 




2 comments:

  1. மூடுபனியின் இறுக்கத்தை
    கதிரவன் திறப்பதுபோல
    நம்முள் இறுக்கத்தை துறக்க
    திறவுகோல் இருப்பினும்
    நாமும் புல்லின் மேல் பனித்துளி

    கவிதை அருமை

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...