Saturday, February 18, 2023

சின்னஞ்சிறு மலர்ச்சி by Vidhya Nivash

 


கதிரவனை கண்டு சிரிக்க காத்திருந்த  தாமரையும்

சந்திரனின் வருகையில் சிரிக்க காத்திருந்த ஆம்பலும்

அன்னையின் வாசனை முகர்ந்து சிரித்த குழவியும்

சரியான நேரத்திற்கு எதிர் நோக்கி வெடித்து சிரிக்க காத்திருந்த பருத்தி இதழ்களும்

தலைவனின் அடி ஓசையை கேட்டு சிரிக்க காத்திருந்த தலைவியின் பாத கொலுசும்

நெருப்பின் சிறு துளிப்பட்டவுடன் வானில் சிரித்த  பட்டாசுகள்

மழையும் வெயிலும் ஒருமிக்க சிரிக்க காத்திருந்த வானவில்லும்

ஆசிரியரின் முகத்தை கணினியில் கண்டு சிரிக்க காத்திருந்த சின்னஞ்சிறு வாண்டுகளும்..

சின்னஞ்சிறு மலர்ச்சியே புது விடியலுக்கான புரட்சியே..






2 comments:

  1. அருமையான வார்த்தை பிரயோகம் வித்யா புரட்சியினால் மலர்ச்சியும் உண்டு.

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...