Tuesday, February 7, 2023

நடுநிசி புலம்பல் by Vidhya Nivash

 


அதிகாலை முதல் 

நடுநிசியில் கூட

சில நேரம்

சூரியன் மறைவிற்கு பின்

நீங்கள் உண்பதில்லை என்று சொல்வர்

கால மாற்றமோ 

இல்லை எங்களின் பழக்க தோசமா

பல நேரம் ஒருவரையும் நெருக்க விடுவதில்லை

சில நேரம் இரவிலே உண்டு விடுவதால்

காலையில் உன் கூட்டத்திற்கு காலிடமே காட்சி

மிச்சம் மீதிக்கு சிட்டுக்குருவிகளை விட்டு வைத்தாய்

இரவில் கூட குரல் எழுப்பி

இன்னும்  உங்கள் அடுக்களை கடையை மூடவில்லையா 

எனக்கு இரை வைக்கவில்லையா

அல்லது விடியற்காலை என்று வந்தாயோ அல்லது

 ஓவர் டைம் முடித்து வந்தாயோ 

ஆழ்ந்த தூக்கம் இல்லையோ 

மூச்சு பயிற்சியும் தியானமும் பண்ணிய

 பழக்கம் இல்லையோ

உடன் பிறந்தவர் யாரும் இல்லையோ 

ஒன்றே ஒன்று செல்ல பிள்ளையா அல்லது

உனக்கு இரையை வாரி இறைத்து

சோம்பேறி ஆக்கிவிட்டோமோ 

பிரியாணியும் ரொட்டி துண்டங்களையும் சுவைத்த

உனக்கும்  ஹார்மோன்கள் மாற்றம் வந்ததோ 

ரொம்ப பேசாதீங்க பிள்ளைகள் சாப்பிடாத கீரை சாதத்தையும் அதையும் இதையும் வைத்து விட்டு

இப்ப என் மேல் குறைய

நாளைக்கு வரமாட்டேன் ...

அப்பா ரொம்ப கஷ்டம் சடசடவென

பறந்தது..








2 comments:

  1. அன்பானவர்களிடம் அதிகாரமாய் பேசும் ஐந்தறிவு ஜீவி -------- நன்று

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...