Thursday, February 9, 2023

அன்புள்ள அப்பா by Vidhya Shanmugam




 அன்புள்ள அப்பா,

எப்படி இருக்கீங்க சாப்பிடீங்களா. எப்போதும் நீங்க கேட்கும் கேள்வி மாப்பிள்ளை எப்படி இருக்கிறார்.அம்மாவிடம் எப்போதும் பேசுவோம் அம்மாக்கிட்டயே உங்களை பற்றியும் கேட்டு விட்டு வைத்துவிடுவேன்.ரொம்ப குறைவு அப்பா உங்களிடம் நான் பேசியது வீட்டிலிருந்த போதும் சரி இப்பவும்.உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அப்பா .நீங்கள் என்னிடம் பேசும் போது முகம் கொடுத்துக்கூட பேசியதில்லை.ஒரிரு வார்த்தைகள் மட்டுமே பேசுவேன் படிக்கும் காலத்தில் இப்போது என் பிள்ளைகள் பண்ணும் போது உணர்கிறேன்.இப்போது போல் இல்லை அப்பா என்றால் ஒரு இடைவெளி மாரியதை என்று அன்று. எதையும் கேட்காமலேயே எங்களின் தேவைகளை பூர்த்தி செய்தீர்.மறக்க முடியாதது பத்தாம் வகுப்பு ஆசிரியரிடம் செய்தியை தவிர டிவியே பார்க்கமாட்டேன் என்று சொன்னது.நான் டிவி பைத்தியம்.உனக்கு புடித்த பாடல் என்று கூப்பிடுவதும் இரவில் பார்த்த அன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் மறக்க முடியாத நினைவுகள்.அம்மாவின் கண்டிப்பில் வளர்ந்தாலும் தக்க சமயத்தில் உங்கள் ஆதரவு தேவைப்பட்டது.நாங்கள் பிறர் முன் சங்கடபடக்கூடாது என்று கடுமையாக உழைத்தவர் .நீங்க சாப்பிடும் போது முதலில் எங்களை கேட்டு விட்டுதான் சாப்பிடுவீர்கள் அது எத்தனை மணியாக இருந்தாலும் சரி அது இன்னும் வரவில்லை என் பிள்ளைகளிடம் எனக்கு.வாரத்தின் ஏழு நாளும் வேலைக்கு சென்று நீங்க சிந்திய வியர்வையில் இன்று நாங்கள் சுகமாக உள்ளோம்.ஒரு நாளும் பெண்பிள்ளைகள் என்று சொல்லியதே இல்லை.உங்களுக்காக எதுவும் செய்து கொண்டதே இல்லை.உங்களின் சிக்கனமும் உழைப்பும் நாங்கள் உயர காரணம்.காலையில் முதல் வேலையாக பஸ்கிற்கு எடுத்து எண்ணி வைக்கும் சில்லரை.காலம் தவறாமல் இருக்கும்.கஷ்டப்பட்டாலும் மேல் படிப்பு படிக்க வைத்தீர் இன்றும் அம்மாவிற்குக்கூட அந்த வருத்தம் உண்டு.ஆனால் என்றும் உன் இஷ்ட படி சந்தோஷமாக இரு என்று சொல்வீர்.நீங்க சொல்வது காசை தேவையில்லாமல் செலவு செய்யாதீங்க ,கவனமாக இரு.இந்த இரண்டும் இன்னும் நான் கத்துக்கணும் அப்பா.உங்கள் உடம்பை பார்த்துகோங்க அப்பா. உங்களின் பாதி பழக்கம் என்னிடம் உள்ளது.உங்களை மாதிரி முடியாவிட்டாலும் என்னால் முடிந்த வரை உங்களை பார்த்துக்கொள்வேன்.சரியான நேரத்தில் நீங்க சொல்லும் கணிப்பு என்றும் பாடம் எங்களுக்கு..

                என்றும் சொல்வேன் பெருமையாக தேவையான கண்டிப்புடன் எந்த கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக மகாராணி போல் வீடே சொர்க்கமாக வாழ்ந்தோம் என்றும்,இதில் நான் நீ என்ற போட்டி இன்றி ஒரு வரை ஒருவர் விட்டு கொடுக்காத நம்பிக்கையிலும் புரிதலிலும் சமமாக வாழ்ந்தனர் என் பெற்றோர் என்று பெருமையாக சொல்வேன் அப்பா..

இப்படிக்கு,

அன்பு மகள்,

 வித்யா சண்முகம்.

4 comments:

  1. அருமையான முதல் பதிவு. உண்மை. தந்தையின் உழைப்பை தெரிந்து கொண்டாலும் அதன் உணமை தற்போது நினைப்பதும் அதன் உணர்வும் எல்லோருக்கும் ஒன்றே

    ReplyDelete
  2. உண்மையை பகிர்வதற்கு தைரியம் வேன்டும் உங்கள் கவலை எல்லாம் கால போக்கில் மறையும்

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...