Wednesday, August 2, 2023

நட்பின் பிடி by Veena Shankar

 


பள்ளி பருவத்தில் இணைந்த நட்பா?


சாதித்து விட்டதற்கான பெருமையா?


அடுத்த ஓட்டத்திற்கான பயிற்சியா?


பிரிவால் வந்த தளர் நடையா?


எதிலும் இணைய துடிக்கும் மாற்றமா?


வயது மூப்பில் கொண்ட பதற்றமா?


பணம் என்ற வார்த்தையால் பெற்ற ஆனந்தமா?


வாழ்வில் ஒருவருக்கொருவர் துணையா?


ஊர் வம்பு பேச விரும்பாமல் திரும்பி செல்லும் காட்சியா?


மலரும் நினைவுகளின் தொடக்கமா?


முதியோர் கல்வியிலும் பாடத்தின் அழுத்தமா?


தங்கள் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியால் களிப்போ?


இல்லை இல்லை. இவை யாவும் இல்லை.


தம்மை போல் உள்ளவர்களின் நிலை எண்ணி எடுத்த முதல் அடியோ? 


 அதுவே முதியோர் இல்லத்தின் தோன்றலுக்கான முதல் படியோ?


வளர்ந்து விட்ட ஞானத்திலும் 

மறந்து விட்ட ஞாலத்திலும் 

பிறந்த முதியோர் இல்லத்திலும் 

இடம் தேடும் நெஞ்சமோ?


இளைஞர்களை புறம் தள்ளும் முதியோர் படையோ?

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...