Tuesday, August 22, 2023

அதிசயம் by Vidhya Nivash


 வித்தியாசமான மலர் ஏற்கெனவே

 பார்த்து இருந்தாலும் முதல் முறையாக

 கண்டேன் அதிசயத்தை மரத்தின்

 வேரும் மலரும் கிளைக்களுக்கு

 அடியில் எத்தகைய இயற்கையின்

 படைப்பு.நுனியில் மலரும் மலர்

 இங்கே வேரின் நுனியில் அழகு.கீழே

 கொட்டிக்கிடைக்கும் மலர்களை

 பார்க்கும் போது அங்கு தடமாக மாறி

 தினமும் சுமக்க ஆசை.இன்னொரு

 வித்தியாசமான காட்சி.மரத்தடியில்

 குப்பைத்தொட்டி அங்கு மரத்தை தவிர

 யாரும் கீழே எதையும் போட

 அனுமதில்லை. அற்புதமான

 அதிசயமான இயற்கையின் அழகை

 ரசிப்பதுடன் காப்பதும் நமது கடன்

 என்று சொல்லாமல் சொன்ன காட்சி.

இந்த அழகியின் பெயர் நாகலிங்க பூ.

2 comments:

  1. உண்மை வித்யா. அழகிய சிந்தனை

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...