வார்த்தைகளும், நேரமும் ,மனமும்
போதுமே எழுத்தை விட சிறந்த ஆயுதம் உண்டோ...
எப்பேர்பட்ட மனதையும் துளைக்க
குரலை விட வலிமையான ஈட்டி உண்டோ...
எப்பேர்பட்ட மூளையையும் எட்ட
இதற்கு ஊடகமாக காகிதமும்,
தொலைபேசியும் எழுத்துக்கும்
குரலுக்கும் உயிர்க்கொடுத்து மனதோடு உரையாட தொலைத்த ஒவ்வொரு நொடியும் சுகமே...
அந்த உணர்ச்சிகள் பட்டாம்பூச்சி
பறக்கும் துடிப்பு அதை விளக்கமுடியா ..
குரலோடு உறவாடிய மனது உருவை
ஏற்க தயங்கும் மூளைக்கு
எட்டியது மனதிற்கு ஏன் தயக்கம்..
உருவமற்று உயிரோடு உறவாடியவை
உருப்பெற்று முன் வந்து உரையாட
நேரமில்லை மனமில்லை
வார்த்தையும் இல்லையே..

அருமை. சொல்லும் எழுத்தும் சிறந்த ஆயுதமேயானலும் பல நேரங்களில் மௌனம் விடையே
ReplyDeleteThank you Veena
ReplyDelete