Tuesday, February 7, 2023

நிழலும் படமும் by Vidhya Nivash

 


உன்னை நான் படம் எடுக்க 

நீ என்னை படம் எடுத்தாய்

தண்ணீரில் பிம்பம் மணற்மேட்டின் உருவம்

உன்னில் என்ன மறைத்து  உள்ளாய் நீரே

உன்னில் பட்டதெல்லாம் அதன் முகம் காண

கலந்தெல்லாம் நிறம் மாற

என்ன ஒப்பந்தம் கொண்டாய்

நீரில் விழுந்த சூரிய கதிரை விழுங்கி

உப்பாய் படிந்தாய் மழை விழ கரைவாயோ

பனி வர உறைந்து பல உருவங்கள் தான் உனக்கு

உப்பு படர்ந்த நீரில் ஒரு பக்கம் கல்லாய்

மறுபக்கம் கூழாய் நடுவில் நீராய்

மொத்தத்தில் கால கண்ணாடி



4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. எல்லா இடங்களிலும் கவிதை கொட்டிக் கிடக்கின்றது முஸாபாவிலும்

    ReplyDelete
  3. மிக்க நன்றி😊😄

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...