உன்னை நான் படம் எடுக்க
நீ என்னை படம் எடுத்தாய்
தண்ணீரில் பிம்பம் மணற்மேட்டின் உருவம்
உன்னில் என்ன மறைத்து உள்ளாய் நீரே
உன்னில் பட்டதெல்லாம் அதன் முகம் காண
கலந்தெல்லாம் நிறம் மாற
என்ன ஒப்பந்தம் கொண்டாய்
நீரில் விழுந்த சூரிய கதிரை விழுங்கி
உப்பாய் படிந்தாய் மழை விழ கரைவாயோ
பனி வர உறைந்து பல உருவங்கள் தான் உனக்கு
உப்பு படர்ந்த நீரில் ஒரு பக்கம் கல்லாய்
மறுபக்கம் கூழாய் நடுவில் நீராய்
மொத்தத்தில் கால கண்ணாடி

This comment has been removed by the author.
ReplyDeleteNandru
ReplyDeleteஎல்லா இடங்களிலும் கவிதை கொட்டிக் கிடக்கின்றது முஸாபாவிலும்
ReplyDeleteமிக்க நன்றி😊😄
ReplyDelete