Me time இது ரொம்ப புதுசு, ஆன
ரொம்ப பழசு. ஆளுக்கு ஆள் மாறுபடும்
அர்த்தம். லிட்டர் கணக்கில்
காபிப்போட்டு நினைக்கும் போது
அமர்ந்து கிண்டல் அடித்து சிறுசிறு
சண்டைப் போட்டு பேசி மகிழ்ந்தனர்.
அப்போது எந்த குழந்தையும் ஆறு
மணிக்கு பள்ளிச் செல்லவில்லை,
மதிய உணவிற்கும் வீட்டுக்கு
வந்தனர்.நிறைய நேரம் நிறைய உடல்
உழைப்பு.அன்று தனிமனித
அடையாளம் தேவைப்படவில்லை.
ஆனால் ஏக்கம் இருந்தது.
காலையில் பால்கனியில் செடிகளை
ரசித்து காப்பிக்குடிக்க ஆசை தான்
நேரமில்லை .குக்கரில் விசில்
அடிக்கும் நேரத்தில் குட்மார்னிங்
மெசேஜ் போட்டு கைபேசியில் ஒரு
பார்வையுடன் தொடங்கும் me
time. சில நேரம் மூச்சு முட்டும்
நமக்கென நேரமில்லை என்று . இந்த
கைபேசியே எல்லாத்தையும் முழுங்க
ஏது நேரம் மற்றதை கவனிக்க.
Me time தேவை சில நேரம் தினமும்
பிடித்ததை செய்யாமல் ஒரு ஏக்கத்தை
வளர்ப்பதற்கு பதில் பிடித்ததை
செய்தோம் என்ற தன்னம்பிக்கை
வளர அது தேவையே.முன்பு
இதற்கென தனியாக முகவரி இல்லை
ஆனால் எல்லாம் உண்டு சுற்றி
ஆட்களும் உண்டு.
ஆனால் இன்று நான்கு சுவர் மணி
கணக்கில் me time, எல்லாம்
விஞ்ஞானத்தின் கையில் உன்னை
யாரும் கவனிக்கவில்லை,
அங்கீகரிக்க வில்லை,தனிமை.எதை
நாம் கவனிக்கிறோமோ இல்லையோ
Google நம்மை நன்கு கவனிக்கிறது.
கிடைக்கும் நேரத்தை me time என்று
பெயர் வைத்து ஆக்கபூர்வமாக
வளர்த்து,நம் உடலை கவனிக்க அது
அவசியமே.யாரும் தட்டிக்கேட்க,
தட்டிக்கொடுக்க ஆள் இல்லாத போது
நம்மை நாமே மெருகேற்ற me time
தேவை இந்த இயந்திர
வாழ்க்கையில்..