Sunday, June 25, 2023

சாவி by Veena Shankar



 சாவி


உன்னை வகை வகையாய் மனிதன் உருவாக்கினாலும் உன் தோழனும் பூட்டு தான். 

ஆனால் நீ மட்டுமே சற்று இடம் மாறி தொங்குகிறாய்


 பெண்ணின் இடுப்பிலும் 


அலமாரியின் அடியிலும்


சேலையின் சேலைக்குள்ளும்


முதாலாளியின் கைக்குள்ளும்


பல தருணத்தில் விரும்பி எடுப்பவரிடத்தும்


சில தருணத்தில் விரும்பாமல் தடுப்பவரிடத்தும்


எந்நாளும் பிறருக்கு தெரியாமல் ஒளித்தும்


சிலநேரம் திசை மாறிய பறவையாய்


பல நேரம் மூளையின் மறதியால் தொலைவதும்


தொலைத்தவன் காணாமல் தவித்தும் 


அப்படி தவித்து போனாலும் உனக்கு மாற்றாக கண்டுப்பிடித்தானே உன்னை போல் ஒருவனை

ரகசியத்தையும் தந்திரத்தையும் திறக்கும் , உடைக்கும் மந்திர சாவி

 வினாக்கு உண்டு விடை தோராயமாக , பூட்டுக்கு உண்டு சாவியும் துல்லியமாக

எப்போதும் துணையோடு இருக்க நீ நினைத்தாலும் துரதிஷ்டவசமாக பிரித்தே வைக்கபடுகிறாய் இல்லை முற்றிலுமாக தொலைந்து விடுகிறாய் 

இல்லை மறைத்து வைக்கப்படுகிறாய் இதில் உன் விருப்பத்தை அறிந்து கொள்ளாமல் மானிடம் செய்யும் மகத்துவமும் இதுவோ?

திருமணம் செய்து கொண்ட பின்னும் தனி வாழ்வு, சந்ததியையும் பெற முடியாமல்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...