Tuesday, June 6, 2023

நீ எப்ப வருவாய் by Vidhya Nivash

 


காலையும் மாலையும் உன் நினைப்பு

 கண்ணே எப்ப வருவாயோ!

வந்த உடன் நிற்பாயோ இல்லை

 பறப்பயோ!

பத்து நாட்களுக்கு ஒரு முறை தான்

 உன் வருகை ..

கோடையில் இன்னும் தாமதம்..

நட்ட நடுராத்தியெல்லாம் வருகிறாய்!

என்ன வென்று சொல்வது காலையில்

 நீ இல்லையேல் வேலை ஒன்றும்

 ஓடாதே...

நீ குறைய குறைய மனம் படபடக்கும்

நீ எல்லை கடந்தாலும் மனம்

 நிலைகொள்ளாது!

நீ எப்ப வருவாய்...





2 comments:

  1. அருமை. விடை தண்ணீர் என்பது தாங்கள் சொல்ல கேட்டது, அதற்கு முன் அறிய ஆவல்.

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...