பார்த்ததில் பிடித்தவை..
இரண்டு வருடத்திற்கு முன் வந்த
"Home" என்ற மலையாள படம்
மனத்தோடு பேசியது.சின்ன சின்ன
அசைவுகள் கூட ரசிக்க தூண்டியது
.மீன் நகர்வது முதல் தேநீர் வரை,ஒரு
தந்தையின் தவிப்பு,ஒரு தாயின்
கோபமும் பாசமும் அழகாக அந்த
குடும்பத்தில் நாமும் ஒருவராக
மாறுவோம்.அதுவும் ஒரு தந்தை
புதிதாக வாங்கிய கைபேசியை
வைத்து படும் அவஸ்தைகளை
சிரித்து,அழுது ,சிந்திக்க வைக்கும்
படம்.
அதே போல் ரசித்த இன்னொரு படம்
சமீபத்தில் வந்த "pookkalaam"
அழகான குடும்ப பூக்கோலம்.
தொண்ணூற்றை கடந்த தாத்தா
பாட்டியின் காதல்,மோதல்,கூடல்
கதை.அழகான காட்சிகள், ஐந்து
பிள்ளைகளின் பெற்றோர் எதிர்பார
விரிசல் அதில் நகமும் சதையும்
இல்லை கொழுக்கட்டை போல்
உள்ளவரிடம் மனக்கசப்பு.
நகைச்சுவை கலந்த நல்ல
குடும்பப்படம்.
மூன்றாவது படம் "good night"
மூடநம்பிக்கை,தாழ்வுமனப்பான்மை
மற்றும் குறட்டை மூன்று முடிச்சுகளை
பிரிக்கும் ஒரு அழகான நகைச்சுவை
கலந்த குடும்பப்படம்.
மூன்றிலும் ஒற்றுமை தாமரை இலை
மேல் உள்ள தண்ணீர் போல்
இருந்தாலும் உள்ளே செம்புலப்
பெயல் நீர் போல் கலந்த அன்பு
நிறைந்த பெரியவர்கள் அழகு.

This comment has been removed by the author.
ReplyDeleteஉண்மை தான் வித்யா. பூக்கொலம் படம் கவர்ந்தது. நினைத்து கூட பார்க்கவில்லை பெரியவர்களின் காதலை மையப்படுத்திய திரைப்படம்
ReplyDeleteYes Veena
ReplyDelete