Monday, June 19, 2023

தெய்வத்தின் தெய்வம் அப்பா by Susila

 


ஈன்றாளே அன்னை,

ஈரைந்து திங்கள்,

இன்னுயிரை தான் சுமந்தே..

அவள்தாம் சுமந்த பிள்ளையும்,

அன்னையும் சேர்த்தே தான் சுமப்பான்

 தந்தை...

தாயென்ற தெய்வத்தை சேர்த்தே

 சுமக்கும்,

 தெய்வத்தின் தெய்வம் - அப்பா

 நீயல்லவா..


அப்பாவின் கோபம் தப்பானதல்ல,

எப்போதும் அது அன்பானது..

அவர் கண்டித்து பேசும் வார்த்தைகள்

 எல்லாம் நமை கரைசேர்த்து காக்கும்

 அக்கறையே..


பிள்ளைக்கு முதல் நாயகன்,

நாம் பார்க்கும் வீரம்,

பாராத உழைப்பு, மாறாத முயற்சி, அவர்

 தளர்விலும் தளராத

 தன்னம்பிக்கையின் எழுச்சி சித்திரம். 


பிள்ளையின் முகத்தில் சிரிப்பை

 பார்க்க, தான் தொலைத்த சிரிப்பை

 தேடாத உயிர்,மெழுகாய் கரைந்து

 ஒளியாய் மிளிர்ந்து, கரை

 சேர்க்கும் ஒரு கலங்கரை விளக்கு...


பிள்ளையின் கனவுக்கு நனவில்

 உழைப்பவன்..

தன் பிள்ளையின் வாழ்க்கை விடிய

 தன் இரவுகளை தொலைத்தவன்..


காலமெலாம் நமை சுமந்த

 சுமைதாங்கியின் சுமை களைவோம்..

அன்பால் அவரை சுமப்போம்

 என்றென்றும்...


Original version : Mrs. Suseela

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...