Thursday, June 8, 2023

வஞ்சியே வா! வா! by Veena Shankar



வஞ்சியே வா ! வா!


புஞ்சை மண்ணை தாங்குபவன் பெஞ்சாதியான உன்னை தாங்கமாட்டேனா? 

 

வஞ்சிக்கும் வறுமையில்லை விஞ்சிய எண்ணமுமில்லை உன்னை அடையாது என்னை துஞ்சும் பார்வையால் மயக்க வா! வா!


தஞ்சம் கொள் என் நெஞ்சில் , கள்வனான என்னிடம் பூஞ்சை போல் ஒட்டி கொள்ள வா! வா!


எஞ்சிய சோறும் பழைய கஞ்சியும் வயிறு நிரப்பும் , நீ உண்ண என் பசி அடங்குமே! விரைவில் வா! வா!


சஞ்சலம் நீக்கி, மஞ்சம் விரித்து, கஞ்சத்தனமில்லா அன்பை பொழிந்து, பிஞ்சு விரல்கள் நம்மை பற்ற

கொஞ்சும் மொழியும் சொல்ல வா ! வா!


பஞ்சு போன்ற இலகுவான மனதுடன் 

கெஞ்சி கேட்கிறேன் உன்னை

வஞ்சனையில்லா வாழ்வில் வசந்தம் பாடுவோம் வா! வா!


நஞ்சை மறந்த நானும் உன்னிடம் கொள்ளும் அன்பிற்கு

பஞ்சம் இல்லை எந்நாளும் நீயும் வா! வா!


தஞ்சையை ஆண்ட பூமியில் வாழ வாஞ்சையோடு வா! வா!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...