Monday, June 26, 2023

என் மூளை அல்ல by Veena Shankar



மனிதனுக்கு மனிதன்

 பொறாமைப்பபட்டு மாற்றி கொள்ள

 முடியாத ஒரே உறுப்பு மூளை மட்டுமே.

 பொறாமையும் இல்லை. மாற்றி

 கொள்வதும் இல்லை

 நல்லவையை மட்டும் பிரித்து

 காட்டாமல் எல்லாவற்றையும் நீ

 சிந்திக்க உதவுவதால் தான் கெட்டவை

 பலதும் அரங்கேறுகிறது.

 நீ மழிங்கி போனால் நான்

 மயங்குவேன்


நீ சிந்திக்க தூண்டினால் நான்

 ஒளிருவேன்


நீ அயர்ந்தால் நான் அடங்கிபோவேன்


நீ அடங்கினால் என் மற்ற உறுப்புகள்

 தானமாக போய் விடும்


நீ தானமாய் போக வாய்ப்பும்

 உண்டெனில் மற்படியும் என்னிடமே

 சேர்ந்து விடுவாயோ?

மனிதனின் படைப்பிற்கும்

 அப்பாற்பட்டது இது மட்டுமே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...