Friday, June 16, 2023

அறம் by Vidhya Nivash

 சமீபத்தில் படித்த கேட்ட இரண்டு

 ஆனால் ஒன்று.பலரால் பேசப்பட்ட

 புத்தகம் அறம் அதை படிக்கும் வாய்ப்பு

 இப்போது தான் கிடைத்தது.ஒரு

 விதமான அனுபவத்தை தந்தது சில

 கதைகள் ஏன் என்று ..தெரிந்த

 சமுதாயம் ஒன்று ஆனால் மறைந்து

 இருப்பவை அதில் இருக்கும் மக்கள்

 என கண்ணோட்டங்கள் பல.


இரண்டாவது கேட்டது சில

 ஆண்டுகளுக்கு முன் ஒரே

 மாதிரியான படம் அதுவும் எல்லோரும்

 வீட்டில் அடைப்பட்டு கிடந்த சமயம் ஏன்

 இது மாதிரியான திரைப்படங்கள்

 என்று?? அதன் பிறகு சில படங்கள்

 அதுவும் சுதந்திரத்திற்கு முன்

 பேசப்பட்டதை மீண்டும் பேசியது, அப்ப

 சமுதாயத்திலும் சில நடந்தது.ஏன்?

சில வாரங்களுக்கு முன் தான் ஏன் IIT

 அதிகம் மாணவர்கள் சேருவதில்லை

 தெரிந்த வட்டத்தில் என்ற

 கேள்வி.அதன் பிறகு வந்த NEET

 முடிவுகள் ஆச்சரியம் தந்து மகிழும்

 வேளையில் இன்னொரு புறம் படித்த

 செய்தி சிந்திக்க வைத்தது.


இதற்கெல்லாம் பதில் தந்தது

 முன்னால் கலெக்டர் சசிகாந்த்

 செந்தில் அவர்களின்

 உரையாடல்.முதலில்  பெருகிவிட்ட

 குழுக்கள் அதில் வரும் விவாதங்கள்

 அதில் வரும் எதிர்ப்புகளுக்கு அதில்

 சேர்ந்துவிட்ட ஒரே காரணத்திற்காக

 அமைதியாக இருக்க வேண்டிய

 கட்டாயம்.எது சரியான? எது அறமோ?

 அதில் இருக்கோமா ?


 பழக்கவழக்கங்களால்

 திணிக்கப்பட்டதை தெரியாமல் நாமும்

 நம் குடும்பத்தோடு பழகி

 வருகிறோம்.அன்றாடம் பல சின்ன

 சின்ன விஷயங்களுக்கு ஏங்கும் நாம்

 ஏன் அடிப்படை தேவைகளை இழந்து

 தவிக்கும் சமுதாயத்தை

 மறந்தோம்.பல காலமாக அதை



 சிலர் மட்டுமே செய்து வர

 திணிக்கப்பட்டவை இன்றும்

 தொடர்கிறது.அவர்களுக்கு எங்கே

 கதவு திறக்க? IIT,NEET,MERIT இது

 போல் பலவும் எட்டாக்கனி .


கடைசியாக மகள் கேட்ட கேள்வி அறம்

 என்றால் என்ன ? பல விளக்கங்கள்

 இருக்கு.ஆனால் ஒவ்வொருவரும்

 கடைப்பிடிப்பதே அறம் என்று

 ஆகிவிட்டதில்ல..எனக்கும் சரியாக

 தெரியவில்லை .அவரின்

 உரையாடலை கேட்டு சிறுப்பிள்ளை 

போல் பல கேள்விகள் சிந்திக்க

 தூண்டியது.

4 comments:

  1. Excellent Vidya. Thank you for sharing your thoughts.

    ReplyDelete
  2. வித்யா அருமை. பல கேள்விகளுக்கு இன்னும் விடையில்லை

    ReplyDelete
  3. உண்மை வீணா .நன்றி

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...