Tuesday, June 27, 2023

உள்ள வரை by Veena Shankar

 


உள்ள வரை


செடியில் உள்ள பூவை காதலித்தேன் அதன் மொட்டுக்களையும் நேசித்தேன் அது வாடாத வரை 


என் கவிதையை காதலித்தேன் அதற்கு வந்த விமர்சனத்தையும் ரசித்தேன் கவிதையில் உள்ள பிழைகள் தெரியாத வரை 


தண்ணீரை காதலித்தேன் அதன் நிறத்தையும் நேசித்தேன் என் தாகம் தீர்க்கும் வரை 


என் மனதை காதலித்தேன் என் பேச்சையும் வியந்தேன் அது பிறரை புண்படுத்தாத வரை 


என் வயதை காதலித்தேன் வளர்ச்சியையும் நேசித்தேன் அதன் நினைவுகள் நீங்காத வரை


மனித பிறப்பை காதலித்தேன் மனிதனாக மாறவும் ஆசைப்பட்டேன் என் உயிர் நீங்காத வரை


கரு விழியை காதலித்தேன் காட்சியையும் நேசித்தேன் இயற்கையும் மாறாத வரை 


காற்றை காதலித்தேன் அதன் அவசியத்தையும் உணர்ந்தேன் அதை நான் மாசுபடுத்தாத வரை


மனைவியை காதலித்தேன் நண்பனையும் நேசித்தேன் இரண்டும் என் விழி விட்டு விலகாத வரை

 

மழையையும்

காதலித்தேன் 

இருளையும்

 ரசித்தேன் அவை என்னை துன்புறுத்தாத வரை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...