எத்தனை அருமையானது இந்த கருந்துளை
தாயின் வயிற்றிலிருந்து கருவுக்கு செல்லும் சுவாசமும் நீண்ட கருந்துளையின் ஊடே
அந்த கருவும் தன்னை காட்ட வேண்டி வெளிவரும் பாதையும் கருந்துளையே
இறப்பின் போது இடப்படும் அரிசியும் செல்வது வாய் எனும் கருந்துளையிலே
மாயக் கண்ணன் ஏந்தும் குழலில் பிறக்கும் இசையும் கருந்துளையின் ஊடே
ஒரு பிம்பத்தை படம் எடுப்பதும் கருந்துளை வழியே
அதை எடுப்பவரும் காண்பதும் தன் கருவிழி எனும் கருந்துளை வழியே
அடுப்பில் நெருப்பை வளர்க்க செய்வதும் ஊதுகுழல் எனும் கருந்துளையே
பூட்டை திறக்கும் சாவியும் உட்புகுவது கருந்துளையிலே
ஆழ்துளை கிணறு தோண்டுவதும் அதனில் இடப்படும் உருளையும் கருந்துளையே
அதில் சிலநேரம் பிஞ்சு கரங்கள் சிக்குவதும் அந்த கருந்துளையிளே
வானின் ஓசோனை பதம் பார்ப்பதும் இந்த மாசு எனும் கருந்துளையே
கருந்துளை என்றும் வெறுந்துளை ஆனதில்லை இவ்வுலகில்

ஆஹா அற்புதம் நாம் அன்றாட வாழ்வில் பல கருந்துளைகளை கடக்கிறோம் என்பதனை அருமையாக விளக்கி விட்டீர்கள் நன்று வீணா நேயர் விருப்பத்திற்கு
ReplyDeleteநன்றி சகோதரரே
Delete