Wednesday, June 14, 2023

ஆச்சரியம் by Vidhya Nivash


 

எங்கும் பனிமூட்டம் போர்வை போல்

 சாரலாய் விழும் பனிதுளிகள் .அந்த

 பனிமூட்டம் வந்து மேனியை தழுவும்

 போது உள்ளூர யாரோ புகுவது போல்

 ஆங்காங்கே படர்ந்துள்ள புதர்கள்

 அரிசி போல் இலைகள் அதில் நிற்க

 இடமில்லாமல் வழுக்கிச்சொட்டும்

 பனித்துளிகள் அதை ஏந்த துடிக்கும்

 விரல் நுனிகள். ஆச்சரியம் தான் இந்த

 பாலைவனத்தில் கடுங்குளிரில்

 நனைகிறாய் .அனல் பறக்கும்

 கோடையில் எப்படி கால்கடுக்க

 நிற்பாயோ !!அதற்கு ஏற்றாற்போல

 படைக்கப்பட்டாயோ !!

4 comments:

  1. அழகு பனி துளியும் வித்யாவின் எழுத்தும்

    ReplyDelete
  2. பனித்துளி நாலே ஊட்டி கொடைக்கானல் ஞாபகம் தான் வருது எப்ப போக போறோமோ ஆனா வித்யாவோட கவிதையை பார்த்து ஊட்டிக்கு போன மாதிரியே இருக்குது - அருமை

    ReplyDelete
  3. நன்றி தோழரே😄

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...