Monday, June 5, 2023

மிகை கொள்ளும் தகை by Veena Shankar

 


பாரத்தால் தலை அமிழ்ந்து இதழில் தெரியும் புன்னகை அடுத்தவரின் பார்வைக்கு தெறிக்கும் புன்னகை


இளமையில் தன் வயிற்றில் சுமந்த பிள்ளையால் வயோதிகத்தில் அவளுக்கு கிடைத்த பரிசு தலை சுமை வாழ்வின் சுமையால்


தலையில் சுமையா? அல்லது மணி மகுடமா? குடும்பத்தை சுமக்கும் பெண்களுக்கு இவ்விரண்டையுமே தந்திருக்கிறது அவர்கள் வாழ்வு


குடும்ப சுமையை தூக்கி பழகிய எனக்கு சாக்கு சுமை தெரியாது என்கிறாளோ இந்த பெண்மணி


வயதில் தனிமை

உடலில் வறுமை

வாழ்வின் கொடுமை

தலையில் சுமை


வறுமை மட்டுமே கொடுமையல்ல வாழ்வில் தனிமை கொள்வதும் வறுமையே


மிகை கொள்ளும் வாழ்வும்  

உவகை கொள்ளும் மனமும் 

வாகை கொள்ளும் வீரமும் 

சிகை கொள்ளும் பாரமும்

வகை கொள்ள கண்டேன் நான் இந்த

தகை சான்ற பெண்ணிடம்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...