Friday, June 2, 2023

பொழுதும் இனிமையே by Veena Shankar

 


பொழுதும் இனிமையே 


விடியல் பொழுதில் தூய காற்றை உள்வாங்கி செல்லும் நடைபயிற்சியும்


காலைபொழுதில் ஓரிடத்தில் அமர்ந்து அமைதியாய் கதிரவனின் ஒளியை சுவாசித்து கொண்டே அருந்தும் தேநீரும்


உச்சி பொழுதில் சாலையில் நடமாட தயக்கம் கொண்டு என்னுள் புகுந்த மூடத்தனமும்


மாலை பொழுதில் செங்கதிர்கள் விரிக்க பிள்ளைகளை பள்ளி விட்டு வீடு அழைத்து வருவதும்


அந்தி பொழுதில் கதிரவன் அழகை மறைக்க ரசித்தவாறே வீட்டில் விளக்கு ஏற்றுவதும்


இரவு பொழுதின் மடியில் பிள்ளைகளாய் நிலவின் குளிர்ச்சியை கண்டு மகிழ்வதும்


பொழுதொன்றுக்கு மருந்து என்பது மறைந்து மூன்று வேளையாய் சுருங்கியதும்


தற்பொழுது வாழும் வாழ்க்கையும்


எப்பொழுதும் உறுதி கொள்ளும் மனதும்


அப்பொழுதும் பிறரை நோகடிக்கா குணமும்


இப்பொழுதில் வேண்டுகிறேன் இறைவா!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...