Monday, June 5, 2023

வேடங்கள் by Veena Shankar

 


உண்மைக்கும் மாயைக்கும் உள்ள இடைவெளியே வேடம்

அரிதாரம் இல்லாமல் அரங்கேறுகிறது வாழ்க்கை எனும் நாடகத்தில் . ஆனால் பிறர் வேடம் இதுவென தெரியாமல் விழிக்கிறது நம் மனம்

விசுவாசம் கொண்டால் வேசம் போட தோன்றாது. 

விசயம் தெரிந்து வேஷம் கலைந்தாலும் நம்பியவரின் சுவாசம் மன்னிக்காது.


நம் வேடங்கள்


எத்தனை வேடங்கள் நம் வாழ்வில் 


சிலநேரம் ஆண் பெண்ணாக 


பலநேரங்களில் பெண் ஆணாக 


கணவனுக்கு மனைவியாக


மனைவிக்கு கணவனாக


பிள்ளையின் பெற்றோராக


பெற்றோரின் பிள்ளையாக


ஏமாளிக்கு ஏமாற்றுபவனாக 


சூழ்நிலைக்கு

எதிரியாக


ரசிப்போருக்கு வித்தைகாரனாக


நமக்கு நாமே ஆசிரியராக


அறியா மாணவனாக


பக்கத்து வீட்டுக்காரனாக 


பரிதவிக்கும் பாமரனாக


இன்னும் பல கோணங்கள் வேடங்கள் நாம் தரிக்கிறோம்


நாம் அணியும் உண்மையில்லா முகமூடிகளும் நம் வேடங்களின் அங்கமே!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...