Monday, June 26, 2023

இருளும் வலியும் by Veena Shankar

 


இயற்கை இருளிலிருந்து என்னை

 மீட்டது செயற்கை தீபம். 

யாரை நான் கொண்டாடுவது?

ஜெனிப்பது முதல் பிறப்பு வரை

 எனக்கு இருளை பழக்கிய

 இயற்கையையா?

பிறந்ததும் வெளிச்சத்தை கொடுத்த

 மெழுகு தீபத்தையா?


தேயும் நிலவின் ஒளி மங்கியதால்

 கரையும்

 மெழுகுவர்த்தியை ஏந்தினாலோ

 இந்த சிறுமி

தன்னை மறந்து, மறைந்து விட்ட

 பெற்றோருக்கு

 தன் முகத்தை காட்ட ஒளியை

 நீட்டினளோ வானத்தை நோக்கி


இருளில் இருந்து என்னை காப்பாற்றி

 கொள்ள நான் தயார்


வெளிச்சத்தில் உள்ள நீங்கள் எப்போது

 உண்மையான வெளிச்சத்தை நோக்கி

 வருவீர்கள்?


படிக்க ஆசைப்பட்டு நானும் விளக்கு

 ஏந்த என் ஆசையை நிராசையாக்கும்

 முயற்சியில் நீங்கள் இருப்பது ஏன்

 மனங்களே?

வாழ விடுங்கள் எங்களை, வளர்ந்து

 காட்டுகிறோம்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...