Thursday, June 1, 2023

அனுபவம் by Veena Shankar

 


அனுபவம்


தாங்கள் எதிர்கொண்ட சிக்கல்களை அடுத்தவரிடம் பகிரும் போது கிடைக்கும் மனத்திருப்தியும் மன பாரம் இறங்கி விட்டதாக நினைப்பதும் அதன் விளைவும் பகிர்வது சிறப்பு. அதை கேட்டு கொண்டுயிருப்பவரும் பின்னாளில் தேவைப்படும் போது அதனை எதிர்நோக்க கற்று கொள்ள வேண்டும் என்பதே பகிர்ந்தவரின் நினைப்பாக இருக்கும்,. அதுவே அனுபவம் கூட. அந்த காலத்தில் என்று யாராவது கதையோ அல்லது அனுபவத்தையோ அல்லது நினைவையோ சொல்ல ஆரம்பித்தால் போதும் நிப்பாட்டு உன் கதையை என்று சொல்லிப் பழகிய பிறகு, நமக்கும் வேறொரு ரூபத்தில் சிக்கல் வரும் போது மட்டுமே நம்மிடம் பகிர்ந்த அந்த நபரை பற்றி நினைப்போம். அவர் சொல்லியிருந்ததை அன்றே செவி கொண்டு கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று சிக்கல் வந்த பிறகு நினைப்பதே அறியாமை.


அனுபவம் மன முதிர்ச்சியின் அடையாளம். அனுபவத்தை பகிர்வோம். முழு மனதுடன் ஏற்போம். ஆனந்தம் கொள்வோம்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...