Monday, June 19, 2023

அன்புள்ள அப்பாவிற்கு by Kiruthika

 


அன்புள்ள அப்பாவிற்கு..

ஆசையாய் ஒரு மடல்..!..


என் தலையில் ..

கொட்டி விட்டு..

தலை நிமிர்ந்து நடக்க சொன்னாய்..!!

ஹீரோ பேனா

பரிசளித்து..

எழுதுவதை நிறுத்தாதே என்றாய்..!!

பத்து ரூபாய் 

கொடுத்து ..

ஐந்து ரூபாய் மட்டுமே கைஇருப்பாய் 

நினைக்க சொன்னாய்..!!

எளியவர் வலியவர் 

என்ற பேதம் இல்லாது

மதிக்க பழக்கினாய்..!!

கணக்கு ..

வாழ்க்கை..

எளிமை ..

பண்பு..

அன்பு..

எல்லாம் சொல்லி கொடுத்த

நீங்கள்..!!

நீர் இல்லாமல் போனால் ..

எப்படி நான் வாழ ?!..என்பதை மட்டும்

சொல்லி கொடுக்கவில்லையே

அப்பா..!!!

மறுபடியும்

உன் கை கோர்க்கவே 

ஆசை !!!

Miss U Appa..

எத்தனை நேரம் அம்மா அடுப்படியில் ..நமக்காக 

சமைத்தாலும்..

பெண் பிள்ளையின் மனம் ஏனோ ..

அப்பாவின் காலடிச் சத்தமே தேடும் ..

மனம் பகிர...!!..

அப்பாவின் -

முள் குத்தும் தாடியில் தான் ...

ரோஜாவின் மென்மை கொண்ட ..

தாயுமானவன் அன்பு கண்டது பெண் பிள்ளைகளின் மனம் இங்கே ..!...

படிக்க நீ இல்லை என்றாலும்..

உன்னை படித்து கொண்டு தான் இருக்கிறேன் ..

என் மனதில் ..

நீ பதித்த எனக்கான உன் பாடங்களில் ..அப்பா..

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...