Sunday, June 11, 2023

எது தேவை by Veena Shankar

 


எது தேவை?


வாழ்க்கையை ஓட்ட எது தேவை?


வெள்ளை மனமா?


பிள்ளை குணமா?


கிள்ளை மொழியா?


அனுசரிப்பதன் உணர்வா ?


அஸ்தமிக்கும் தேவையா?


சுடரின் தியாகமா?


ஆக்ரோஷத்தின் வெளிப்பாடா?


இயலாமையின் அழுகையா?


அறிவதில் வெட்கமா?


வெறுப்பின் பிரயாணமா ?


சிரிப்பின் மூலதனமா?


அழகில் ரசிப்பா?


பெறுவதில் வியப்பா?


கொடுப்பதில் நிறைவா?


விரும்புவதில் களிப்பா?


கணிப்பதில் பெருமையா?


ருசிப்பதில் தவறா?


ரசிப்பதில் சரியா?


வடிவத்தில் நாட்டமா?


தவிப்பின் உச்சமா?


எதில் அழகு?, எதில் நம் தேவை?


எது தேவை வாழ்க்கையை ஓட்ட?


விடை ஒன்றே ஒன்று தான் அது

 மனிதநேயம் எனும் ஆயுதம்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...