Saturday, June 17, 2023

பூவிற்கு பூவையே ஈடு by Veena Shankar



பூவிற்கு பூவையே ஈடு

பூவையும் சங்கிலியால் பிணைக்கும் மனிதர்கள் உள்ளவரை பூவையும் (பெண்ணும்) சுதந்திரத்தை அனுபவிக்க இயலாது

இயற்கையும் இயற்கையும் நடத்தும் போட்டி செயற்கையான தராசு தட்டில்

எது குறை எது நிறை என்று குழந்தை பருவத்தில் கற்றுக் கொண்ட போதிலும் முரண்பாடாக தோன்றியது வளர்ந்த பின், என் மனதில் இருக்கும் என் காதலியின் மனம் நிறைவாய் இருந்தாலும் எனக்கு குறையே அவள் வேறொருவரை கைப்பிடித்ததால்

தராசு தட்டில் பூவை மட்டுமே காணும் கண்களுக்கு அடுத்த தட்டில் நிறைநதிருக்கும் காற்றை காண முடிவதில்லை. அதுபோல் வாழ்க்கையும் தெரிவது மாயை தெரியாதது உண்மை வடிவம்

இரு கண்களில் காணும் காட்சிகள் ஒன்றானாலும் ஓர் மனதில் தோன்றும் எண்ணம் மட்டும் இரண்டாக உணர்வது ஏன்?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...