Thursday, January 18, 2024

ஒளியும் ஒலியும் by Veena Shankar

 


ஒளியும் ஒலியும் ஒருசேர

நான் பக்தியில் லயிக்க

கண்மூடி இருந்தாலும்

கண்ணுள்ளே அவர்

ஆட்சி 


மனமுவந்து நின்ற வேளையில்

தன் குரலாலே வாக்கு

சொன்னார் மௌனமாய்

என்னுள்ளே


அவரிடம் இருந்து விடை பெறாமல்

நான் அவரிடம் என்னை

ஒப்படைக்க

த்வணி மாறியது


சங்கடப்பட்ட நான்

கண் திறக்க

தீபாராதனை தட்டு

வெகுதூரம் சென்றிருக்க

ஏமாற்றம் மிஞ்சி மீண்டும் கண் மூடுவதற்குள்


சக்கரைப் பொங்கல்

நெய்யால் என் கை

நினைக்க

மெய்யும் மணப்பதாக உணர்ந்து 

அவருக்கு நான் நன்றி சொல்லும் வேளையில் 


அகக் கண்ணில்

 நான் கண்ட காட்சி

பொய்யல்ல

அவரே என் முன்னே

உணர்ந்தேன் ராஜ கம்பீரமாய்


ஆழ்ந்த பக்தி சொல்லும் என்றும் மெய்ஞானம் அறிவது

அரிது என்று


கோடியில் திளைக்கும் அவரும்

கொடியசைத்து அமர்ந்தார் 

அடுத்த முறை எனக்கு

தரிசனம் தரும் வரை


இறைவன் உறையும் இடத்தில் 

இறையருள் வேண்டுவோரிடத்தில்

தாங்கள் வாழ்வின் 

உயர்வுக்காக வேண்டி நிற்கும் யாசகர்கள்

என் அகத்தின் கண்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...