காலையில் எழுந்தவுடன் இந்த கலை
மாலை வரை என்னில் மலை போல் இருக்க
வாலை சுருட்டிக் கொண்டு இவ்வலையில் சிக்க
சீலை பிடித்து செல்லும் நான்
சிலையென நிற்க
தோலை காத்தபடி நான் தொலைவில் இருந்தபடி பார்க்க
கடவுளும் தோன்றினார் கண் முன்னே இலையின் கலையில்
கலைக்கு இலை பொருட்டல்ல
அதில் உருவாக்கும்
வடிவமே சாட்சி
கலையில் இத்தனை கோணங்களா?
வட்டம், அரைவட்டம்,
அதன் விட்டம், ஆரம்
அது கொண்ட
கோணம், கணம்
திரட்டி உருட்டிய
உருளை, கூம்பு
என பலவும்
இணைந்த கோடுகள்
மற்றும் வளைவுகள்
நெகிழவும் செய்ததே
என் உள்ளத்தை
கண்டபோது
அதன் கலை நுணுக்கம்
அறிந்த போது
பெற்ற வடிவமும்
அவை ஒவ்வொன்றும்
தாங்கி நிற்கும்
நேர்த்தியும்
கலைஞனின் கைவண்ணமும்
அவனை உருவாக்கியவனும்
அவனால் உருப்பெற்ற யாவும்
இவனாலே!
வண்ணமே தேவையில்லை,
காணும் பொருள்
பரம்பொருள் என்பதால்
சான்றிதழும் அவசியப்படவில்லை
உருப்பெற்றது
தோற்றுவித்தவனின்
சிஷ்யன் என்பதால்

Wow ..படைத்தவனையே படைத்திட்ட பெருமை பெருமிதம் ..👌👌👌 கலை வணங்கும் ..தலைக்கனம் நீக்கும் 🙏🙏
ReplyDeleteநன்றி. உண்மை கிருத்திகா
Delete