Friday, January 26, 2024

உழவர் by Veena Shankar

 




கலப்பை பிடித்து களத்தில்

 இறங்கினால் மட்டுமே

வளம் காண முடியுமே 

அவன் தன் வாழ்வில்


உழவு என்பது

உழுவதில் மட்டுமே

முடிவதில்லை

விளைவித்ததை

வினையில்லாமல் விலையாக்கும் வரை

உண்டு என்றும் அவனுக்கு


உழுவ இயந்திரம் கொண்டாலும்

அதை இயக்க தெரிந்தவனும் அவனே!

எந்நாளும் பூமி இயங்க காரணமும் அவன்

கொடுக்கும் பொருளாளலே!


அவனுக்கோர் நாள்

உழவர் திருநாள்

அவனோடு இணைத்து உழைக்க

அறியாவிட்டாலும்

என் வீட்டு வாசலில்

கோலமிட்டு அவன்

கோலத்தையும் அழகு

காண செய்யும்

முயற்சியில் நான்


விரும்பினால் இடுங்கள் கோலத்தை

வாசலில் அடுத்த வருடம், உழவன் 

அவன் விரும்பியது

கிட்ட நம் வாழ்த்தோடு

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...