எவனும் ஒருவனே
மெய்யில் கையை பற்ற அவன் இருக்கும் போது அவனை நான் கைப்பற்றினேன் உண்மையில்
தெளிவு பிறந்த மனதில் குடி கொண்டது இறை, கையை பற்றிக் கொண்டு
கரங்கள் பலமே என்றும்
கொடி நாட்ட
அவசியமுள்ள போது தேற்ற
ஆதரவாய் பற்றிக் கொள்ள
இணைந்து செயலாற்ற
ஈகையோடு உதவி செய்ய
உறுதியோடு இறையை பற்ற
ஊனமில்லாத மனம் கொள்ள
எளிதாய் வாழ்வில் கவின் பெற
ஏளனமாய் இல்லா வாழ்வு பிறக்க
ஐயம் இல்லா மனதோடு சிறக்க
ஒருவனின் ஆட்சி வேண்டுமே
ஓய்வில்லாமல்இறை பணியாற்றிட வேண்டுமே எந்நாளும்
இந்த ஊணும்

No comments:
Post a Comment