Monday, January 1, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 முத்தமும் சத்தமில்லாமல் பிறக்கும் வலிக்கும் மனதிற்கு 

வார்த்தையும் மௌனமாய் பிறக்கும் சிரிக்கும் இதயத்திற்கு

தீண்டுவதும் சிறக்கும் எதிர்பாராமல் கிடைக்கும் சுகத்திற்கு

வாழ்க்கையும் வரமாய் ரணத்திலிருந்து மீண்டு வாழ்பவற்கு

 செருக்குள்ள நெஞ்சத்தையும் சறுக்க வைக்கும் காதல்

தவிப்புள்ள மனத்தையும் தெளிய செய்யும் காதல்

சினமுள்ள நிலையிலும் சிலையாக மாற்றும் காதல்

குறிப்பறியா நேரத்திலும் திளைக்க வைக்கும் காதல்

பூவாத தாவரத்தையும் தளிர வைக்கும் காதல்

தேடாத இன்பத்தையும் பழக செய்திடும் காதல்

 நேரத்தையும் மறந்திட கண்களில் தெறிக்கும் காதல்

தனியே ராகம் கொள்ளும் ஒருதலைக் காதல்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...