Sunday, January 14, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


அந்த பார்வை சொல்லும் மொழி என்ன?


காதலன் காதல் சொல்வான் என்ற எண்ணத்தினாலா?


கணவன் தன் அழகை கண்டு மயங்க விடுக்கும் அழைப்பா?


மனம் அடைந்த ஆனந்தத்தில் அவனுக்கு நன்றி காட்டும் விதமா?


தன் தாய்மையை வெளிபடுத்த வெட்கப்பட்டு நிற்கும் நிலையா?


பருவம் அடைந்த பிள்ளைகள் கொண்டாலும் அழகில் தானும் நிகர் என்று காட்டும் தருணமா?


எந்நாள் காவலன் தன் இணைக்கு முதிர்ச்சியை வெளிப்படுத்தும் வேளையா?


எதுவும் அழகு அவள் கடைக்கண் பார்வையால் மாறா காதலினால்

மயங்க பூமியில் ஆள் உள்ள வரை


 மறைந்திருந்து

ஓர் விழி

ஓருயிரை கவர

அதுவும் தன் 

கடைக்கண் பார்வையை

பதிலாய் கொடுக்க

காதலில் புதைந்தது

நான்கு விழிகள்

ஈர்த்தது இரு மனங்கள்

ஒன்றையொன்று

ஓர் நாள் மாலையில்

இதயங்கள் சங்கமித்த

பின் காத்திருப்பது

எதற்காக?

நினைவில் இருந்து

நீங்கா அந்த

கடைக்கண் பார்வை

நினைவிழக்க செய்தது

அவளை

அவன் தன்

அவளை தழுவ

கடைகண்ணும்

வெட்கம் கொண்டு

மூடிக்கொண்டது 

 தன்னையே

தொட்டா சிணுங்கி

செடி போல


கடைக்கண்ணில்

இவ்வளவு 

சூட்சமமா?

அவள் மயங்க

காதலா? அதில் மூழ்க 

காமமா? அதில் வாகை கொள்ள

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...