ஏதேதோ ஆசைகள்..
கனவுகள் நிரப்ப ..
இதயம் இணிக்க..
கவிதைகள் பிறக்க...
பூக்கள் கூந்தலேற ...
மருதாணி கைவசமாக...
பட்டுப் புடவை -
மேனியில் பவனிவர..
கெட்டிமேளம் முழங்க...
நாதஸ்வரம் நயமாக்க ..
அட்சதை ஆமோதிக்க ...
பெண்மை அரங்கேற..
மென்மை எதிர்ப்பார்க்க..
நிதர்சனம் - கனவுக்கு
எதிராக..!..
பொறுமை வசப்பட ..
காலம் வலிமறுக்க ..
காதல் வலிதுறக்க..
அனுபவம் வழிகாட்ட..
ஆன்மீகம் ஆசுவாசப்படுத்த..
எதை அமர்த்தி கொள்ள..
எதை புறம் தள்ளி விட ..
என வாழ்க்கை பாடம் சொல்லி தர..
சங்கடங்கள் வடிய ..
திறமைகள் தங்க...
மின்னும் -
நம் வாழ்க்கை ..
எனும்
அட்சய பாத்திரம் !!!..

அருமை கிருத்திகா
ReplyDeleteமிக அருமையான பதிவு சகோதரி கிருத்திகா...👌
ReplyDelete