Wednesday, January 10, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 நாசிகள் விழித்த போது

உதடுகளும் உறங்கியதே


கண் அயர காத்திருந்து 

மயங்கியதன் விளைவோ?


கூடுவது ஆண் பெண் உறவு மட்டுமல்ல

அவர்களின் மனமும்

எதிர்காலத்தின் எதார்த்தமும் தான்

 வளர்ந்த இரு மழலைகளின் காதல் பரிவர்த்தனைகள்


நேரில் காணும் உண்மை காட்சியா?


ஆண் பெண்ணின் உறவுக்கு சாட்சியா?


நெருங்கி விட்டதாக காட்டும் வாலிபமா?


பாடம் படிக்க வந்த சித்திரமா?


பாடம் எடுக்க உதவும் கலையா?


ஓவியன் உயிர் பெற்ற வடிவமா?


பிரிவில் வலுப் பெற்ற விதமா?


வருந்தாத மனதிலிருந்து பிறந்த வலியா?


கண்டுபிடிப்போம் முடிந்த வரை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...